1 min readJun 16, 2019
நில ஒளி சிதறும் நீரோடை
மெல்லிய காற்று
அன்ன பறவையுடன்
அழகான ஒரு நடை
மேகம் கொட்டும் மழையில்
ஓர் மெல்லிய ஓவியம்
அப்பம் ருசிக்க நெடும் பயணம்
தேனீர் தேன் அமுதம்
என ஒரு பெருமிதம்
வாழ்வின் சில நிமிடங்கள்
நான் தொலைத்த கனவுகள்
திருத்த முடியாத தருணங்கள்
நிறைவேறாத ஞாபகங்களுடன்